ஜெருசலேமில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு கரை பெய்டர் லிலிட் . ஒரு பாலஸ்தீனிய பெண் சாதாரணமாக நடந்து வந்து கொண்டு இருந்தார்.அந்த பெண் கருப்பு பர்தா எனப்படும் ஹிஜாப் அணிந்து இருந்தார். பெரும்பாலும் யூத நகரத்திற்குள் நுழைய ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த யிஷாய் கிரிடென் பெர்கர் ( வயது 33) அவரிடம் அடையாள அட்டையை கேட்டதாககூறபடுகிறது . அடையாள அட்டையை அந்த பெண் காட்டினார் பின்னர் பாதுகாவலர் என்ன கூறினார் என தெரியவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது கைப்பையில் இருந்த கத்தியை எடுத்து பாதுகாவலரை மிரட்டினார்.பின்னர் பாதுகாவலரை அந்த கத்தியால் தாக்கினார். இதில் பாதுகாவலர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் ஷாரி ஷிடெக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் பாதுகாவலர்களால் அந்த பெண் சுடபட்டார் அந்த பெண் பெயர் ஹில்வா சலிம் தர்வீஷ் (வயது22) மத்திய ஜெருசலேத்தில் உள்ள ஹடாஷ் பல்கலைக்கழக மருத்த்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பால்ஸ்தீன பெண் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




0 comments:

Post a Comment

 
Top