ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணையச் சென்ற பெங்களூரைச் சேர்ந்த நபர் தன் மனைவிக்கு எழுதிய ரகசிய குறிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் படித்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் முகமது அப்துல் அஹாத் கடந்த ஆண்டு துருக்கி அதிகாரிகளிடம் சிக்கினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்ட அவர், ஐஎஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் எண்ணத்துடன் துருக்கி சென்றாரா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அவர் தனது மனைவிக்கு தான் தலைமறைவானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று லேப்டாப்பில் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

அதில், பணம் சேமிப்பது எப்படி, முக்கியமான தொலைபேசி எண்கள், நம்பத்தகுந்த நபர்களின் பெயர்கள், மகள் திருமணத்தை நடத்துவது எப்படி, நிதியுதவி பெற யாரை அணுகுவது ஆகிய விவரங்களை தன் மனைவிக்காக விட்டுச் சென்றுள்ளார்.

தங்க பிஸ்கட்டை விற்று மகளுக்கு திருமணம் செய்து முடித்து, தன் மனைவி வீட்டிலிருந்த படியே புதிய வர்த்தகம் ஒன்றை தொடங்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், நான் எங்கிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க பொலிஸையோ, சட்ட அமலாக்க பிரிவினர் யாரையுமோ அணுகக் கூடாது.

நான் சிறையில் இருந்தால் என்னை விடுவிக்க எந்த ஒரு வழக்கறிஞரையும் சந்திக்கக் கூடாது.

நான் தொலைபேசியில் இதற்கான உத்தரவுகளை இட்ட பிறகு இவர்களை அணுகலாம். நீயாக எதுவும் செய்து விடாதே என்று எச்சரித்துள்ளார்.

இதன்பின்னர் அவர் சிரியா எல்லையருகே துருக்கிய அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top