ஆணாகப் பிறந்து பெண்­ணாக மாறிய ஒரு­வரும் பெண்­ணாகப் பிறந்து ஆணாக மாறிய ஒரு­வரும் காத­லித்து பிரிந்த  நிலையில், அவர்­களின் வாழ்க்கை குறித்த ஆவ­ணப் ­பட­மொன்று பிரிட்­டனின் பிபிசி தொலைக்­காட்­சி­யினால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எரின், கெத்தி எனும் இந்த அபூர்வ ஜோடி மெட்­ரோ­நியூஸ் வாச­கர்­க­ளுக்கு ஏற்­கெ­னவே அறி­மு­க­மா­ன­வர்­கள்தான்.

தற்­போது 21 வய­தான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்­தவர். அவ­ருக்கு லுகே என பெற்றோர் பெய­ரிட்­டி­ருந்­தனர்.

தான் பெண் தன்­மை­யுடன் இருப்­பதை உணர்ந்த அவர்  2012 ஆம் ஆண்டு  சத்­தி­ர­சிகிச்சை மூலம் பெண்­ணாக மாறினார். 

அதே­வேளை, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எரின் எனும் 19 வயது இளைஞன் பெண்­ணாக பிறந்­தவர். எமரல்ட் எனப் பெய­ரி­டப்­பட்­டி­ருந்த இவர், பின்னர் சத்­தி­ரசி­கிச்சை மூலம் ஆணாக மாறினார். 

2012 ஆம் ஆண்டு  முதல் தட­வை­யாக சந்­தித்த இவ்­வி­ரு­வரும் காதலிக்க ஆரம்­பித்­தனர்.

உலகில் ஆணாகப் பிறந்­த­வர்கள் பெண்­ணாக மாறு­வதும் பெண்­ணாகப் பிறந்­த­வர்கள் ஆணாக மாறு­வதும் தற்­போது ஆச்­சர்­ய­க­ர­மான விட­ய­மல்ல. 

ஆனால், ஆணாகப் பிறந்­து­ பெண்­ணாக மாறி­ய­வரும், பெண்­ணாகப் பிறந்து ஆணாக மாறி­ய­வரும் காத­லித்து இணைந்து வாழ்­வது அபூர்வம்.

அமெ­ரிக்­காவின் இத்­த­கைய முத­லா­வது காதல் ஜோடி, எரின், கெத்தி ஜோடி­யாகும்.

2013 ஜூன் மாதம்தான் எரினின் மார்­ப­கங்கள் சத்­திர ­சி­கிச்சை மூலம் அகற்­றப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதன்பின் இவர்கள் ஏனைய அமெ­ரிக்க ஜோடி­களைப் போன்று தற்­போது கடற்­க­ரை­களில் நீந்­து­வ­துடன் பட­குச்­ச­வா­ரி­யிலும் ஈடு­பட ஆரம்­பித்­தனர்.

தனக்கு கம்­பீ­ர­மான ஆணாக எரின் தெரி­கிறார் என கெத்தி கூறி­யி­ருந்தார்.

துர­திஷ்­ட­வ­ச­மாக இவ­ர்களுக்­கி­டை­யி­லான உறவு முறிந்­து­ விட்­டது. ஆனால், புதிய ஆவ­ணப்­ப­டத்­துக்­காக இவர்கள் இணைந்து செவ்­வி­ய­ளித்­துள்­ளனர்.

நேற்­றி­ரவு ஒளி­ப­ரப்­பா­க­வி­ருந்த இந்த ஆவ­ணப்­ப­டத்தில், தமது உறவின் ஏற்றத்தாழ்வுகள் குறித்து இவர்கள் தெரிவித்துள்ளனர். 

பாலின மாற்றத்தின் பின் காதலித்த காலத்தில் தமது உடல் மற்றும் உள ரீதியான மாற்றங்கள் குறித்தும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Top